சிறுநீரகத்தை விற்று வட்டி கட்டச்சொல்லி மிரட்டல்
17 Jun 2026, 10:05 pm

சிறுநீரகத்தை விற்று வட்டி கட்டச்சொல்லி மிரட்டல்

காவல் அலுவலகத்தில் பெண் புகார்

ஈரோடு, ஜூன் 17- வாங்கிய கடனுக்கு உரிய பணத்தை செலுத்தியபின்பும், கூடுதல் பணம் கேட்டும், சிறுநீரகத்தை விற்று பணத்தை கட்டச்சொல்லி மிரட்டும் நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் அலு வலகத்தில் புகாரளித்தார்.

ஈரோடு, சூரம்பட்டி பழைய கொங்கு பள்ளி அருகே உள்ள பகுதியை சேர்ந்த வர் மணி என்பவரின் மனைவி சுகுணா (37). இவர் மாவட்ட காவல் அலுவல கத்தில் செவ்வாயன்று அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, என் கணவர் 10 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.

துணி வியாபாரம் செய்து வரும் எனக்கு, இரு மகள்கள் உள்ளனர். குடும்ப தேவைக்காக ஈரோடு, அசோகபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளேன். கடன் தொகையை தவணை முறையில் செலுத்தி வந்தேன்.

இந்நிலையில், வட் டிக்கு வட்டி, மீட்டர் வட்டி கேட்டு என்னை துன்புறுத்தி வருகிறார். வாங்கிய கடன் தொகையைவிட அதிக தொகையை செலுத்தி விட்டேன்.

இருப்பினும் மேலும், தொகையை வட்டி, அசலாக தர வேண்டும் என கிருஷ்ணகுமார் கேட்கிறார். பணம் கேட்டு என்னை மன உளைச்சலுக்குள்ளாக்கி குடும் பத்துடன் தற்கொலை செய்து கொள் ளும் அளவுக்கு துன்புறுத்துகிறார். கடன் வாங்கும் போது, வங்கி காசோ லையை அவரிடம் கொடுத்திருந்தேன்.

தற்போது அந்த காசோலையை வைத்து மிரட்டல் விடுக்கிறார். மேலும், கிட்னியை விற்று பணம் கட்டு, என தகாத வார்த்தைகளால் மிரட்டுகிறார். எனவே, எனக்கு உரிய தீர்வு வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகு றித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.