ஈரோடு மேற்கு: அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
9 Apr 2026, 5:30 am

ஈரோடு மேற்கு: அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு, ஏப்.8- ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சு.முத்துசாமியின் வாக்கு சேகரிப்பு பயணத்தில், பெண்கள் உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சு.முத்துசாமி, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நடைபெற்று வரும் திமுக ஆட்சியின் சாதனைகளைப் பயனைப் படுத்தி, குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆதரவுடன் வரவேற்கின்றனர். அனைவரிடமும் பேசி குறைகளைக் கேட்டறிந்து, மாற்றத்திற்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

செல்லுமிடங்களில் குழந்தைகளை கையில் ஏந்தி நிற்கும் பெற்றோர் அமைச்சரிடம் கொடுத்து வாழ்த்து பெறுகின்றனர். பெயர் சூட்டும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. கொளுத்தும் வெயிலையும் வரவேற்க காத்திருக்கும் மக்களை புன்னகையுடன் அணுகி வாக்குகளை சேகரித்துச் செல்கிறார். திட்டமிட்ட நேரத்தில் பகுதியை கடக்க முடிவதில்லை. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சாரத்தை முடிப்போம் என்று திட்டமிட்டாலும் பயண நேரம் நீள்கிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் காத்திருப்பது அமைச்சரின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.