தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் சுமைப்பணியாளர்கள் முறையீடு

29 May 2026, 11:11 pm
சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் சுமைப்பணியாளர்கள் முறையீடு

சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் சுமைப்பணியாளர்கள் முறையீடு

ஈரோடு, மே 29- சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனத்தால்.

தொழில் அமைதி கெடும் என சிஐடியு சுமைப்பணியாளர் சங்கம் ஆட்சி யரிடம் முறையீடு செய்துள்ளது.

ஈரோடு மாநகரில் விஆர்எல் லாஜிஸ் டிக்ஸ் என்ற லாரி பொருள் போக்குவரத்து நிறுவனம் இயங்கி வருகிறது.

இதன், புக்கிங் பிரிவில் 8 சுமைப்பணி தொழிலாளர்கள் பணி யாற்றி வந்தனர்.

சிஐடியு-வில் இணைந்து பணியாற்றி வந்த இவர்களில் 7 பேரை கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது.

இதில் 4 பேர் தற்காலிக பணி நீக்கத்திற்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும் என சட்டப்படி வழக்கு தொடர்ந்த னர்.

வழக்கில் தொழிலாளர்களுக்கு பிழைப் பூதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர்க ளுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வேறு சங்கத்திற்கு மாறிய 3 தொழிலாளர்கள் மீண்டும் சிஐடியு-வில் இணைந்தனர்.

இதனை ஏற்காத (டிபிடிஎஸ்) சங்கத்தினர் அவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்தனர்.

தொழி லாளர்களுக்கு இடையிலான பிரச்சனை யால் நிறுவனத்தில் வேலை தடைபடக்கூ டாது என்றும் வேறு கிளை ஆட்களை வைத்து தற்காலிகமாக பணி செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலை நீடித்து வந்த நிலையில், தொழில் அமைதி கெடும், சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மாற வாய்ப்புள் ளதையறிந்து சிஐடியு தரப்பினர் எதிர்வினை யாற்றாமல் அமைதி காத்தனர்.

இந்த நிலை கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வரும் நிலையில், 4 தொழிலாளர்கள் வேலையின்றி, வருவாயின்றி மிகுந்த இன் னலை எதிர்நோக்கியுள்ளனர்.

வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஏற்ப்பட்ட ஒப் பந்தப்படி 50 ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையை விஆர்எல் நிறுவனம் மீறு கிறது. ஆகவே வேலை நடைமுறை பாது காக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், சங்க செயலாளர் செந் தில்குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.