மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
15 Jul 2026, 10:49 pm
<p><strong>மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி</strong></p><p>ஈரோடு, ஜூலை 15- மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.18 ஆயிரமாக உயர்ந் துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், விரலி ரகம் குவின்டால் ரூ.11,206 முதல் ரூ.14,269 வரையிலும், கிழங்கு ரூ.10,429 முதல் ரூ.13,140 வரையிலும் விற்பனையானது. இந்நிலையில், ஈரோடு சொசைட்டியில் புதனன்று நடைபெற்ற ஏலத்தில், விரலி ரகம் ரூ.14,399 முதல் ரூ.17,999 வரையிலும், கிழங்கு ரூ.12,725 முதல் ரூ.16,269 வரையிலும் விலைபோனது. தொடர்ந்து, புதனன்று ரூ.700 உயர்ந்து, ஒரு குவிண்டால் ரூ.18,463க்கு விற்பனையானது. ஒரே மாதத்தில் ரூ.4000 உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறுகையில், தேசிய அளவில் நடப்பாண்டு மஞ்சள் அறுவடை சீசன் முடிந்து, அனைத்து மார்க்கெட்டுக்கும் புது மஞ்சள் வரத்து குறைந்தது. கடந்த 2025-26 இல் மஞ்சள் விலை லாபகரமாக இருந்ததால், மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்தது. விதை மஞ்சள் அதற்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப் பட்டது. எல்-நினோவால் தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகாவில் ஏற்பட்ட வறட்சி யால் மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேசிய அளவில் மஞ்சள் தேவை அதிகரித்துள்ளது. மேற்கா சிய பதற்றம் குறைந்து, மீண்டும் ஏற்றுமதி அதிகரித்து 5 முதல் 10 விழுக்காடு மஞ்சள் ஏற்றுமதி ஆகி உள்ளது. இதனால் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் ஒன்றரை மாதத்தில் மஞ்சள் குவின்டாலுக்கு ரூ.4000 விலை உயர்ந்துள்ளது. முன்பேர வர்த்தகத்திலும் தற்போதைய மஞ்சள் சந்தை விலை மேலும் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கடந்த 15 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்படும் பழைய மஞ்சள் வெகுவாக குறைந்து விட்டது. மஞ்சள் இருப்புக்கும் தேவைக்கும் இடைவேளை குறைந்துள்ளது, என்றார்.</p>
