உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத பேரூராட்சி: ஆட்சியரிடம் புகார்!
19 May 2026, 12:51 am
<p><strong>உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத பேரூராட்சி: ஆட்சியரிடம் புகார்!</strong></p><p>ஈரோடு, மே 18 – பெருந்துறை அருகே பட்டியலின மக்களின் சுடுகாட்டுப் பிரச்சினையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுலாக்காமல், பேரூராட்சி நிர்வா கமே பாகுபாடு காட்டுவதாகத் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியி னர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்குட் பட்ட திருவேங்கடம்பாளையத்தில் ஊர் பொதுச் சுடுகாட்டுப் பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பான வழக்கில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பொதுமக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு நகல்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவ லர் சுடுகாட்டின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் கம்பி வேலி அமைத்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் கள் அந்தச் சுடுகாட்டைப் பயன்படுத்தி வரும் நிலையில், ஆதிதிராவிடர் குடியி ருப்பு மக்களுக்கு என அறிவிக்கப்பட் டுள்ள பகுதிக்கு மட்டும் வேலி அமைக் காமல் பேரூராட்சி நிர்வாகம் அப்படியே விட்டுள்ளது. இது அப்பகுதி மக்களி டையே பெரும் பாகுபாட்டை ஏற்படுத்தி யுள்ளது. அப்பகுதியில் ஆள் பலமும், பண பலமும் கொண்ட நில மாஃபியாக் கள் சுடுகாட்டை ஆக்கிரமிக்க முயல்வ துடன், பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனால் ஊரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற் பட்டு, உயிரிழப்புகள் வரை நேரிட வாய்ப்புள்ளதாக மக்கள் அஞ்சுகின்ற னர். மேலும், இயற்கை மரணங்கள் நிக ழும்போது வெவ்வேறு சமூக வழக்கப் படி சடங்குகளைச் செய்வதில் பெரிய குழப்பமும், சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பும் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மேலும் காலந்தாழ்த்தாமல், நில அளவைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி சுடுகாட்டு எல்லைகளை அளவிட வேண்டும். தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர் சுடு காடு முழுவதற்கும் உடனடியாகக் கம்பி வேலி அமைத்துத் தர வேண்டும் எனத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சார்பில் பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இம்மனு அளிப்பின் போது பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகி கள் பலர் உடனிருந்தனர்.</p>
