முந்தய பக்கம்

ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்வு

30 Nov 2025, 4:29 pm
ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்வு
<p><strong>ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்வு</strong></p> <p>ஈரோடு, நவ.30- ஈரோட்டிற்குப் பெருமை சேர்த்த மாபெரும் தமிழ் ஆளுமையான ஈரோடு &nbsp;தமிழன்பன் நினைவேந்தல் கூட்டம் பெரி யார் மன்றத்தில் நடைபெற்றது. பாவேந்தர் பாரதிதாசன் கவிமர பைச் சேர்ந்த முற்போக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் கூட் டத்திற்கு மதரசா தலைவர் முகமது தாஜ் &nbsp;தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டு &nbsp;வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பி னர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி, முதன்மை கல்வி அலு வலர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று புக ழஞ்சலி செலுத்தினர். மக்கள் சிந்தனை &nbsp;பேரவையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் ஸ்டாலின் &nbsp;குணசேகரன், ஈரோடு தமிழன்பன் பெயரை ஈரோடு மாநகரின் ஒரு வீதிக்கு &nbsp;கூட்ட வேண்டும் என அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram