முந்தய பக்கம்

காங்கேயத்தில் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்

29 Dec 2025, 6:22 pm
காங்கேயத்தில் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்
<p><strong>காங்கேயத்தில் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்</strong></p> <p>திருப்பூர், டிச. 29 - கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் நிகழ்ச்சி காங்கேயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி தலை வர் கவி தலைமை வகித்தார். இதில் கவிஞர் கவிதா பாரதி, &nbsp;தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னை யன் ஆகியோர் கலந்து கொண்டு, கவிஞர் ஈரோடு தமிழன்ப னின் கவிதைகள் குறித்தும், அவருடைய தமிழ் மொழிப் பற்று &nbsp;குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், காங்கயம் அகிலன், ஸ்டாலின், சட்டக் கல்லூரி &nbsp;மாணவி ஜென்னி, பெரியாரின் பெண்கள் அமைப்பு நிர்வாகி &nbsp;கனிமொழி ஆகியோர் ஈரோடு தமிழன்பன் இயற்றிய கவிதைக ளின் மாண்பு குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் கவிஞரின் &nbsp;உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. கூட்ட நிறைவில் அனை வரும் கையில் &nbsp;மெழுகுவர்த்தி ஏந்தி, ஈரோடு தமிழன்பனுக்கு &nbsp;வீரவணக்கம் செலுத்தினர். புரட்சிகர இளைஞர் முன்னணி, &nbsp;பெரியாரின் பெண்கள் அமைப்பை சேர்ந்தோர் பெருந்திர ளாக கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram