தனியாருக்கு விடப்படும் ஈரோடு சோலார் பேருந்து நிலையம் செப்.10 இல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
21 Aug 2026, 12:12 am

தனியாருக்கு விடப்படும் ஈரோடு சோலார் பேருந்து நிலையம் செப்.10 இல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈரோடு, ஆக.20-ஈரோடு சோலார் பேருந்து நிலையம் தனியார்மயமாக்கப்படும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஈரோடு மாநகராட்சியால் கரூர் சாலையில் சோலார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டி முடித்து திறக்கப்பட்டுள்ளஇப்பேருந்து நிலையத்தில் 63 பேருந்துகள் நிற்கும் வசதியுள்ளது. நவீன உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி பேருந்து நிலையம் திறக்கப்பட்டு சற்றேறக்குறைய ஒரு வருடம் ஆன நிலையிலும் கூட இப்பேருந்து நிலையத்திற்கு, அரசு பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. தனியார் பேருந்து நிறுவனங்கள் நீதிமன்றம் சென்று சோலார் பேருந்து நிலையத்திற்கு வர மறுத்து ஆணை பெற்றுள்ளது.

அதாவது வெள்ள கோவில், கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல்ஆகிய ஊர்களுக்கும் இந்த ஊர்கள்வழியாக இதர ஊர்களுக்கும் செல்லும் அரசு பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் சோலார்பேருந்து நிலையத்திற்கும், ஈரோடுபேருந்து நிலையத்திற்கும் நாள் முழுவதும் நகர பேருந்து இயக்கப்படுகிறது.

இதனாலும், தூய்மைப் பணிகள், பாதுகாப்பு, குடிநீர் மற்றும்மின்சார பராமரிப்பு, கழிப்பறை மேலாண்மை போன்ற பணிகளும்,வசதிகளும் இல்லாத காரணத்தால்இப்பேருந்து நிலையத்தின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. இந்த வசதிகளும், பணிகளும் முழுமையாகசெய்து கொடுப்பது மாநகராட்சியின் கடமையாகும்.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி (29.07.2026 அன்று நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் தீர்மான எண்.117ன்படி)தனியார் பங்களிப்புடன் கூடியமுறையில் பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வதென முடிவுசெய்துள்ளது. புதுதில்லியை தலைமையிடமாக கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு இப்பேருந்து நிலையத்தினை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வாறு தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், பயணிகளுக்குமான சேவை கேள்விக்குறியாக மாறும். மேலும் பராமரிப்பு, இயக்க பணிகளை மாநகராட்சி நடத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும். இதுவும் பறிபோகும் நிலை ஏற்படும்.

எனவே, சோலார் பேருந்து நிலைய இயக்க, பராமரிப்புப்பணிகளை தனியாரிடம் கொடுக்கும் முடிவை கைவிட்டு ஈரோடு மாநகராட்சியே நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்படும். முன்னதாக அனைத்து மண்டலங்களிலும், வார்டுகளிலும் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். செப்டம்பர் 10 ஆம் தேதிதனியார்மயத்தை எதிர்த்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தெரிவித்துள்ளார்.