உப்பு தண்ணீர் அருந்திய இருவர் உயிரிழப்பு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு மனு
yesterday
<p><strong>உப்பு தண்ணீர் அருந்திய இருவர் உயிரிழப்பு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு மனு</strong></p><p>ஈரோடு, ஜூன் 22- உப்பு தண்ணீரை அருந்திய இருவர் உயிரிழந்த நிலை யில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது செல்லன்குட்டை. இப்பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நிலத்தடி நீர் உப்பு தன்மையுடையதாக மாறியுள்ள நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அந்த தண்ணீரையே அப்பகுதி மக்கள் குடித்து வந்தனர். இந்நிலையில் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். சிறு நீரகத்தில் கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இவ்வாறு சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் டயாலிசிஸ் செய்து வருகின்றனர். சிறுநீரகங்கள் முற்றிலுமாக செயலிழந்த இருவர் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்தேறி யது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து தலைமையில் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு மனு அளித்தனர்.</p>
