தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே பணிமனையில் கிரேன் உடைந்து 50 அடி உயரத்திலிருந்து விழுந்த ரயில் இன்ஜின்!

17 May 2026, 1:55 am
ரயில்வே பணிமனையில் கிரேன் உடைந்து  50 அடி உயரத்திலிருந்து விழுந்த ரயில் இன்ஜின்!

ரயில்வே பணிமனையில் கிரேன் உடைந்து 50 அடி உயரத்திலிருந்து விழுந்த ரயில் இன்ஜின்!

ஈரோடு, மே 16: ஈரோடு ரயில்வே பணிமனையில் இன்ஜினைத் தூக்கியபோது பாரம் தாங்கா மல் கிரேன் உடைந்து, சுமார் 50 அடி உயரத்தி லிருந்து ரயில் இன்ஜின் கீழே விழுந்து விபத்து க்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் அருகே புகழ் பெற்ற எலக்ட்ரிக் லோகோ (மின்சார ரயில் இன்ஜின்) பணிமனை செயல்பட்டு வரு கிறது. இந்தப் பணிமனையில் மின்சார ரயில் இன்ஜின்களில் ஏற்படும் பழுதுகள் மற்றும் முறையான பராமரிப்புப் பணிகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம் போல் பணிமனையில் ஒரு மின்சார ரயில் இன்ஜினில் ஏற்பட்ட பழுதை நீக்குவ தற்காக, அது கிரேன் மூலம் மேலே தூக்கப் பட்டது. அப்போது, சுமார் 80 டன் எடை கொண்ட அந்த பிரம்மாண்ட ரயில் இன்ஜி னின் பாரத்தைத் தாங்க முடியாமல், தூக்கிக் கொண்டிருந்த கிரேன் திடீரென உடைந்து நொறுங்கியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில், சுமார் 50 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ரயில் இன்ஜின் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கி பலத்த சேதமடைந்தது.

தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இன்ஜின் கீழே விழுந்த சமயத்தில் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். காயமடைந்த வர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரயில்வே பணியாளர்கள் குற்றச்சாட்டு

இந்த விபத்து குறித்து ரயில்வே பணியா ளர்கள் கூறுகையில், “பணிமனையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கிரேன் போன்ற வற்றை அதிகாரிகள் முறையான கால இடை வெளியில் பராமரிப்பதில்லை. தரம் குறைந்த மற்றும் காலாவதியான உபகரணங்களைப் பயன்படுத்துவதே இந்த விபத்திற்குக் காரணம்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி யுள்ளனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.