முந்தய பக்கம்

ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்ய முயற்சி: ஆட்சியரிடம் புகார்

12 May 2026, 1:26 am
ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்ய முயற்சி: ஆட்சியரிடம் புகார்
<p><strong>ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்ய முயற்சி: ஆட்சியரிடம் புகார்</strong></p><p>ஈரோடு, மே 11- பேருந்து நிலைய வளா கத்தில் ஆட்டோ நிறுத்தத் திற்கு அனுமதி இல்லை என நகராட்சி நிர்வாகம் அறிவித் துள்ளதற்கு எதிர்ப்பு தெரி வித்து, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டனர். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் உள்ள பேருந்து நிலைய வளா கத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத் தில் 9 ஆட்டோக்களாக இருந்த நிறுத்தத்தில், தற்போது 43 ஆட்டோக்களாக உயர்ந்துள் ளன. வேறு எந்த தொழிலும் தெரியாத இவர்க ளுக்கு 2 அல்லது 3 சவாரிகள் நாள்தோறும் கிடைக்கும். கடந்த ஏப்.24 ஆம் தேதி ஆட்டோ நிறுத்தத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவ டிக்கை எடுப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள், பயணிகள், போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பல ஆண்டுகளாக தொழில் செய்து வருகி றோம். நகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப் பால் 43 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். ஆகவே பேருந்து நிலைய வளாகத் தின் வடபுறம் ஓரமாக செயல்பட்டு வரும் ஆட்டோ நிறுத்தம் தொடர்ந்து செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் திங்களன்று ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram