தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் ஆலைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

29 Jun 2026, 12:26 am
தனியார் ஆலைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

தனியார் ஆலைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

ஈரோடு, ஜூன் 28- மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்டு வரும் தனியார் எண்ணெய் ஆலையை மூட வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்த காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக் கப்பட்டுள்ளது.

ஈரோடு அருகே மூலக்கரை பகுதி யில் சன் ராஜா ஆயில் இன்டஸ்ட்ரீஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் அரசு விதிகள் மற்றும் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய விதிமுறைகளை பின் பற்றாமல் செயல்பட்டு வந்தது.

இத னால் அப்பகுதியில் நிலத்தடி நீர், விவ சாயம், கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மக்களுக் கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அப் பகுதியில் செயல்படும் ஆலையை நிரந் தரமாக மூட வலியுறுத்தி முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந் துஜா தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனைக் கான மாதிரிகளை சேகரித்தனர்.

இதன் முடிவுகள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என பதிலளிக்கப்பட் டது.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அலுவலகம் முன் திங்க ளன்று காத்திருக்கும் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. இதற் கிடையில் காவல் துணை கண்காணிப் பாளர் தலைமையில் போராட்டக்குழு வினருடன் பேச்சுவார்த்தை நடைபெற் றது.

அதேபோல வருவாய் கோட்டாட்சி யர் (பொ) தலைமையில் ஞாயிறன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் 15 நாட்களுக்குள் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளிப் கப்பட்டதை தொடர்ந்து திங்களன்று நடைபெறவிருந்த போராட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.