தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் ஆலைக்கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நூதனப் போராட்டம்

1 hour before
தனியார் ஆலைக்கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நூதனப் போராட்டம்

தனியார் ஆலைக்கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நூதனப் போராட்டம்

ஈரோடு, அக்.7-அம்மாபேட்டை அருகே தனியார் ஆலைக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூனாடச்சி கிராமத்தில், தனியார்

குச்சி கிழங்கு மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகளால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பர்கூர் மலையில் இருந்து வரும் ஆறு இப்பகுதியின் வழியே செல்கிறது. சித்தாறு என பெயர் பெற்ற ஆறு, சித்தாறு என்னும் பகுதியில் காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றில் கழிவுகளை திறந்து விடுவதால், பாதிப்புகள் பரவலாகி உள்ளது. இராமசந்திரா புரம், கத்திரியான்காடு, அம்மன்கோவில் தோட்டம், நத்தமேடு, கொண்டையன் கொட்டாய், கள்ளுகடை மேடு, சௌயன் கொட்டாய், மணக்காடு, பழனிவேல்புரம், செம்படாபாளையம், குறிச்சி, சமத்துவபுரம், அக்கரையூர், மாணிக்கம்பாளையம், குரும்பபாளையம், சித்தார் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நத்தமேடு பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆற்றங்கரையில் செயல்படும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் ஆலைக்கழிவுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஆலைக்கழிவுகள் வெளியேற்றப்படும் ஆற்றுக்குள் இறங்கி மறுகரைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். இதனை சகிக்க முடியாத காவல்துறையினர் ஒரு சிலரை பார்த்து, ‘ஏன் மக்களை தூண்டி விடுகிறீர்கள்’ என்று சத்தம் போட்டனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் பலரும், ‘தங்கள் நலனை பாதுகாக்க அரசு அதிகாரிகளும், ஆட்சியரும் வந்தார்களா அல்லது ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்தார்களா?’ என்று அதிருப்தி அடைந்தனர். இதனால் பலரும் அங்கிருந்து வெளியேறினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.