முந்தய பக்கம்

குடிநீரின்றி தவிக்கும் மக்கள்: விதொச மனு

2 Jun 2026, 10:19 pm
குடிநீரின்றி தவிக்கும் மக்கள்: விதொச மனு
<p><strong>குடிநீரின்றி தவிக்கும் மக்கள்: விதொச மனு</strong></p><p>ஈரோடு, ஜூன் 2- பூந்துறை பகுதியில் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வரும் நிலையில், இதுகுறித்து ஊராட்சி செய லரிடம் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒ்ன்றியம், பூந் துறை சேமூர் ஊராட்சியில் மாதாகோவில் பட்டியலின தெரு உள்ளது. இங்கு சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. 2 ஆயிரம் லிட்டர் கொண்ட சிண்டெக்ஸ் தொட்டியும் உள்ளது. இது உப்பு நீராக இருப்பதால் 10 ஆயிரம் லிட்டம் கொள்ளவுள்ள ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட தொட்டியையே நம்பியிருக்கும் நிலை தொடர்கிறது. கடந்த சில மாதங் களாக இத்தொட்டிக்கு தண்ணீர் சரிவர வருவதில்லை. இதற்கான வால்வுகள் பழுதடைந்தும், குழாய்கள் உடைப்பு ஏற்பட்டும், தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பல மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கோரி விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் தாலுகா செயலாளர் டி.தங்கவேல் தலைமை யில் அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் மனு அளித் தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram