பாலியல் வன்கொடுமை: சாகும் வரை ஆயுள் தண்டனை
18 Jul 2026, 10:19 pm
<p><strong>பாலியல் வன்கொடுமை: சாகும் வரை ஆயுள் தண்டனை</strong></p><p>ஈரோடு, ஜூலை 18- சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொ டுமை செய்த வழக்கில், வளர்ப்புத் தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவருக்கும் சாகும் வரை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு சோலார் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண்ணின் 11 மற்றும் 9 வயதுடைய இரு மகள்கள், அரசினர் காப்பகத்தில் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில், அந்த பெண் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிவண்ணன் (33) என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் 1 அன்று வங்கிக் கணக்கு தொடங்க காப்ப கத்திலிருந்து சிறுமிகள் இருவரும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டபோது, மணிவண்ணன் அவர்களை பாலியல் வன்கொடுமை செய் துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் தாயிடம் முறையிட்டும், அவர் கண்டிப்பதற்கு பதி லாக மணிவண்ணனுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து காப்பக கண்கா ணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ் வழக்கு விசாரணையின் போதே பாதிக்கப் பட்ட சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்தார். வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதி மன்ற நீதிபதி சொர்ணகுமார், குற்றம் நிரூ பிக்கப்பட்ட மணிவண்ணன் மற்றும் சிறுமி களின் தாய் சவிதா ஆகிய இருவருக்கும் சாகும் வரை இரட்டை ஆயுள் தண்டனை யும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து வெள்ளியன்று தீர்ப்பளித்தார். மேலும், உயிருடன் இருக்கும் மற்றொரு சிறுமிக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அர சுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.</p>
