தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கழிவுகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி

4 Jul 2026, 12:51 am
கழிவுகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி

கழிவுகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி

ஈரோடு, ஜூலை 3- ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் பிளாஸ் டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால், ஏற்படும் சுகாதார சீர்கேடு காரண மாக அப்பகுதி பொதுமக்கள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணி மேற் கொள்வதில் மாநகராட்சி நிர்வா கம் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கிறது.

மாநகராட்சி நிர்வாகம் மக் கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்து செல்வதற்கு தூய்மைப் பணியா ளர்களை பயன்படுத்தினாலும், நகர் பகுதிகள், கடைவீதி, மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலை யம், ரயில் நிலையம், ஊர்களின் எல்லைப்பகுதிகள் மக்கள் வசிக் கக்கூடிய இடங்களில் தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் பைகள், அட்டைகள், செராமிக்ஸ், பிளாஸ் டிக், கண்ணாடி பொருட்கள் என அனைத்து பகுதிகளிலும் ஆங் காங்கே மலைபோல் குவிக்கப் படுகிறது.

தூய்மைப் பணியாளர் கள் வீடு தோறும் வந்து இந்த கழிவுகளை சேகரித்தாலும் மக்கள் ஆங்காங்கே தூக்கி வீசிவிட்டு செல்வதால் அவை சாலையோ ரங்களில் குவிந்து கிடக்கிறது.

இவற்றை சேகரிப்பதில் தூய்மைப் பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள், மோட்டார் வாகனங்கள் மூலம் இயங்கும் வசதி உள்ள வண்டிகள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ள தால், குப்பைகளை சேகரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆங்காங்கே இந்த மக்காத குப்பைகளை சாலையோ ரங்களில் கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர்.

குறிப்பாக, மாநக ராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதி களில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. எனவே, இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.