தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆவது வாரமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் ஏற்படாத உடன்பாடு

30 Oct 2026, 12:44 am
ஆவது வாரமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் ஏற்படாத உடன்பாடு
<p><strong> ஆவது வாரமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் ஏற்படாத உடன்பாடு</strong></p><p>ஈரோடு, அக்.29-அம்மாபேட்டை அருகே தனியார் ஆலையால் நிலவும் சுகாதார சீர்கேடால், அரசுப்பள்ளிகளுக்கு 4 ஆவது வாரமாக மாணவர்கள் வராத நிலையில், மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலைமையிலான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பூனாச்சி ஊராட்சியில் செயல்படும் தனியார் மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் எத்தனால் உற்பத்தி ஆலைகள், சித்தார் ஓடையில் வெளியேற்றிய ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்தது. மேலும், நத்தமேடு, ராமச்சந்திராபுரம் பள்ளிகளுக்கு அருகே தடுப்பணையில் தேங்கிய கழிவுகளால் மாணவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்குள்ளாவதாக குற்றச்சாட்டு தெரிவித்த பெற்றோர், கடந்த அக்.5 ஆம் தேதி முதல்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள</p><p>னர். மேலும், மாற்றுச்சான்றிதழ் வழங்குமாறும், வேறு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர். இதனால், மாணவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். ஒலிபெருக்கி மூலமாக கிராமங்களில் அம்மாபேட்டை போலீசார் பிரசாரத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் புதனன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாசடைந்த நீரால் நிறம் மாறிய பாத்திரங்களை காட்டி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சுற்றுச்சூழல் சீா்கேட்டுக்கு காரணமான இரண்டு ஆலைகளையும் நிரந்தரமாக மூடவேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.