தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டத்திற்கு புறம்பான நீதிமன்ற தீர்ப்பு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

27 May 2026, 11:39 pm
சட்டத்திற்கு புறம்பான நீதிமன்ற தீர்ப்பு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சட்டத்திற்கு புறம்பான நீதிமன்ற தீர்ப்பு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 27- சட்டத்திற்குப் புறம்பான தீர்ப்பினை கண்டித்து, இஸ்லாமிய மக்களின் வழி பாட்டு உரிமையை பாதுகாக்கக்கோரி, தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பிரதேச மாநிலம், தார் நகரில் போஜ்சாலா வளாகமும், கமால் மவுலா மசூதியும் இருக்கிறது.

இங்கு இசுலாமியர் கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த மசூதி இந்து கோயில் மீது கட்டப்பட்டது என்று சங்பரிவார் புகார் எழுப்பினர். ஒன்றிய அரசின் 1991ஆம் ஆண்டு சட்டத்தை ஆதாரம் காட்டி 2003ஆம் ஆண்டு தொல்லியல் துறை இசு லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்தது.

ஆனால் மத்திய பிரதேச உயர்நீதி மன்றம் இசுலாமியர்கள் உள்ளே வரக்கூடாது என் றும், அந்த இடம் இந்துக்களுக்கு உரியது என்றும் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

ஒன் றிய அரசின் 1991ஆம் ஆண்டு சட்டத்திற்கு மாறாக தீர்ப்புகள் மற்றும் முடிவுகள் வந்தால், அது நாட்டில் மிகப்பெரிய குழப்பத்தையும், அமைதியின்மையையும் உண்டாக்கும். எனவே, இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

ஈரோடு ஜவான்பவன் முன்பு செவ்வா யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி தலைமை ஏற்றார்.

இதில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநிலக்குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட்ட அமைப்பாளர் சி.முருகேசன் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற் றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.