கூலி உயர்வு கேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
21 Jun 2026, 2:27 am
<p><strong>கூலி உயர்வு கேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்</strong></p><p>ஈரோடு, ஜூன் 20- ஈரோடு நகர மற்றும் சுற்றுவட் டார சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் நூல் மற்றும் பீஸ் கட்டு ஜவுளி பேல்களை ஏற்றி இறக் கும் பணியில் சுமார் 2000 தொழிலா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போடப்படும். கடந்த 2022 இல் போட்ட ஒப்பந்தம் காலாவதி யாகி சுமார் 16 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் 50 விழுக்காடு கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், ஜவுளி வணிகர் சங்கத்தினர் பேசி தீர்வு காண முன்வரவில்லை. தொடர் முறையீடுகளுக்குப் பிறகு இரண்டு கட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தொழிற் சங்க தரப்பில் கோரப்பட்ட உயர்வு குறித்து பேசாமல் நடைமுறையில் இருக்கும் கூலியை குறைக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என இயற்கை விதிகளுக்கு முரணாக வணிகர் சங்கத்தினர் பதிலளித்த னர். இந்நிலையில், 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பங்கேற் காத உரிமையாளர் சங்கத்தினர் தேர்தல் வருவதால் அது முடிந்த பிறகு பேசுவோம் என்று பேச்சு வார்த்தையை புறக்கணித்தனர். இந்நிலையில் சனியன்று சிஐடியு உள்ளிட்ட அனைத்து சங்கத்தின ரும் அடையாள வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் என்.செந்தில்குமாரி டம் கேட்ட போது, கூலி உயர்வு ஒப் பந்தம் காலாவதியாகி 15 மாதங் களை கடந்து விட்டது. புதிய ஊதிய உடன்பாட்டிற்கு வியாபாரி கள் சங்கம் முன்வர வேண்டும். வரு வாய்த்துறை, தொழிலாளர் துறை தலையிட்டு சுமூக உடன்பாடு காண வேண்டும். 15 நாட்களுக்குள் உடன் பாடு எட்டப்படாத நிலையில் கால வரையற்ற வேலை நிறுத்தத் தில் ஈடுபடுவோம், என்றார்.</p>
