தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூலி ஒப்பந்தம் இழுத்தடிப்பு – சுமைப்பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

26 Jun 2026, 1:50 am
கூலி ஒப்பந்தம் இழுத்தடிப்பு – சுமைப்பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

கூலி ஒப்பந்தம் இழுத்தடிப்பு – சுமைப்பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

ஈரோடு, ஜூன் 25- ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்பாலைகள், துணி வர்த்தக நிறுவனங்க ளில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள், கூலி உயர்வு ஒப்பந்தத்தை இழுத்தடிக்கும் உரிமை யாளர்களை கண்டித்து வரும் ஜூலை 10 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு படவுள்ளதாகச் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஈரோட்டில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளி நிறுவனங்களுக்கு வரும் நூல், துணி பண்டல்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக் கான கூலி உயர்வு ஒப்பந்தம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நூல் வியாபாரிகள் சங்கம் மற்றும் கிளாத் மர்ச்சென்ட்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றுடன் பேசி தீர்மானிக்கப்படும்.

இதன்படி, முந்தைய கூலி ஒப்பந்தம் கடந்த 2025 மார்ச் 31 உடன் நிறைவடைந்தது. ஒப்பந்த காலம் முடி வதற்கு முன்பே தொழிற்சங்கங்கள் சார்பில் கூலி உயர்வு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் முடிந்து 15 மாதங்கள் கடந்தும் உரிமையா ளர்கள் தரப்பு எவ்வித பேச்சுவார்த்தைக்கும் முன்வர வில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையரிடம் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முறையிட்டன. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முத்தரப்பு சமரசப் பேச்சுவார்த்தைகளையும் உரிமையாளர்கள் புறக் கணித்து வருகின்றனர்.

நிர்வாகங்களின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும், புதிய கூலி உயர்வை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் ஜூலை 10 முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாகச் சிஐ டியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் அதிரடி யாக அறிவித்துள்ளது. இதனால் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.