தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுமைப்பணியாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

6 Jul 2026, 10:15 pm
சுமைப்பணியாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
<p><strong>சுமைப்பணியாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு</strong></p><p>ஈரோடு, ஜுலை 6- கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர் சங்கம் சிஐடியு வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. ஈரோடு மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நூல் மற்றும் பீஸ் கட்டுகள், பேல், கெமிக்கல்ஸ் இறக்கி ஏற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. முன்னதாக சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் புதிய கூலி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்தது. நிர் வாகம், தொழில்துறை மற்றும் வரு வாய்த்துறையினரிடமும் முறை யிடப்பட்டது. இந்நிலையில் இரண்டு கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றது. ஆயினும் உரிமையாளர் தரப்பில் உடன்பாட்டிற்கு வர மறுத் தனர். இவ்வாறு ஒப்பந்தம் காலா வதியாகி 16 மாதங்கள் கடந்த நிலை யிலும் வருவாய்த்துறை தலையிட வில்லை. உரிமையாளர்களும் பேச்சுவார்த்தையை புறக்கணித் துள்ளனர். இந்நிலையில் வரும் 10ஆம் தேதி முதல் சிஐடியு காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு சங்க தலைவர் எம்.அர்த்த நாரி தலைமையில் நடைபெற்றது. பொது செயலாளர் என்.செந்தில் குமார் வரவேற்றார். கௌரவ தலைவர் டி.தங்கவேலு சிறப்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட தலை வர் எஸ்.சுப்ரமணியன், சுமை தூக்கு வோர் மத்திய சங்க தலைவர் ஏ. விஜயகுமார், பொதுச் செயலாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மகாத்மா காந்தி சுமைதூக்குவோர் மத்திய சங்க செயலாளர் கே.கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகி கள், திரளான சுமைப்பணியாளர் கள் கலந்து கொண்ட மாநாட் டில் இறுதியாக சிஐடியு சுமைப்பணி யாளர் சங்க துணை தலைவர் எம். பாப்பாகவுண்டர் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.