சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
11 Jul 2026, 10:47 pm
<p><strong>சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு</strong></p><p>ஈரோடு, ஜூலை 11- கூலி உயர்வு கேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஜவுளி, வணிக நிறு வனங்களில் நூல், துணி, கெமிக்கல் உள்ளிட்ட சுமைகளை ஏற்றி இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு உடன்பாடு காலாவதியாகி 16 மாதங்களாகிறது. இந்நிலையில் சுமூக ஒப்பந்தம் உரிய காலத்தில் ஏற்படாத நிலையில் சிஐடியு உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் பல்வேறு முறையீடுகளை செய்து வந்தது. ஆயினும் முன்னேற் ்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. முதல் நாள் வேலை நிறுத்தம் 100 விழுக்காடு வெற்றி யடைந்தது. இரண்டாம் நாளான சனி யன்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. ஆயினும் சில நிறுவனங்கள் வேறு ஆட்களை வைத்து வேலை செய்ய முயன்றது. இதனை ஏற்காத தொழிற் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காவல் துறை தலையிட்டது. நகர காவல் நிலையத்தில் வர்த்தக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற் றது. அதில் வர்த்தக நிறுவன சங்கத்தி னர் 6.8.2026 அன்று பேச்சுவார்த்தை நடத்தி, கூலி உயர்வை இறுதிப்படுத்து வோம் என்று உறுதியளித்தனர். இதனையேற்று, தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறப்படுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள னர்.</p>
