தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

18 Aug 2026, 10:20 pm
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு, ஆக.18-பவானி அருகே குறிச்சி ஊராட்சியில் குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் காலிக்குடங்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது செல்லிகவுண்டனூர் கிராமம். பட்டியலின மக்கள் வசிக்கும் இக்குடியிருப்பிற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. தனியார் ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்கடந்த ஓராண்டாக அப்பகுதி மக்கள் மிகவும்பாதிப்படைந்து வந்தனர். குடிநீருக்காக 3 கிமீசெல்ல வேண்டிய அவலம் நேர்ந்தது. ஒன்றியஅரசின் ஜல் ஜீவன் திட்டம் வந்ததால், அப்பகுதியில் கான்கிரீட் சாலைகள் சேதமடைந்ததும், ஆழமான குழிகள் ஏற்பட்டதும் தான் மிச்சம். ஆனால் குடிநீர் வழங்கப்படவில்லை. இப்பிரச்சனை குறித்து கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார வளர்ச்சிஅலுவலரிடம் நேரில் சென்று அப்பகுதி மக்கள் மனு கொடுத்து பேசினர். ஆயினும் குடிநீர்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில், செவ்வாயன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வரும் ஆக.28 ஆம் தேதிக்குள் உரிய ஏற்பாடு செய்து (30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட) மேல்நிலை தொட்டி வழியாக குடிநீர் விநியோகிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தார். ஆயினும் போராட்டம் தொடர்ந்தது.இதைத்தொடர்ந்து 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டிக்கு இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து பிற்பகல் 3 மணியளவில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. முன்னதாக, சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தாலுகா தலைவர் எஸ்.மாணிக்கம், செயலாளர் பி.கண்ணன், தாலுகாக்குழு உறுப்பினர்கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.