தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் கம்பம் உடைந்து விழும் ஆபத்து

3 Jun 2026, 10:59 pm
மின் கம்பம் உடைந்து விழும் ஆபத்து
<p><strong>மின் கம்பம் உடைந்து விழும் ஆபத்து</strong> </p><p>ஈரோடு, ஜூன் 3- குறிச்சிப் பகுதியில் உள்ள மின் கம்பத்தின் கழுத்து பகுதி உடைந்து, எந்த நேரமும் விழுந்து விபத்து ஏற்படலாம் என்னும் நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது கருங்கண்ணிகாட்டூர். இப்பகுதியில் நடப்பட்டுள்ள மின்கம்பத்தின் கழுத்து பகுதியானது கடுமை யாக சேதமடைந்துள்ளது. உள்ளிருக்கும் கம்பிகள் துருப்பி டித்த நிலையில் உள்ளது. முன் கம்பத்திலிருந்து இழுத்து வரப் பட்ட கம்பிகள் அதன் இணைப்போடு, கீழே விழும் நிலையி லுள்ளது. பின்னால் இழுத்து கட்டியுள்ள கம்பியின் துணை யுடன் தள்ளாடி வருகிறது. கடும் புயல் காற்று, மழையில் எந்த நேரமும் விபத்து நேரலாம் என்ற அச்சத்தில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளனர். இதுகுறித்து மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. பணியிலிருந்த முக வரிடம் (இரண்டாம் நிலை) கேட்டபோது, கம்பம் இல்லை, வந்தால் மாற்றிக் கொடுக்கிறோம், என்றார். உதவி செயற் பொறியாளரிடம் கேட்ட போது, மழையால் சேதமடைந்த கம் பங்களை தற்போது தான் மாற்றினோம். எனினும் 4, 5 நாட்க ளில் மாற்றிக் கொடுக்கிறோம், என்றார். 179 மின் மாற்றி கள், 10ஆயிரத்து 898 மின் இணைப்புகள் இருக்கும் பகுதியில் 20 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 6 பேர் மட்டும் தான் பணியில் இருக்கின்றனர். இவர்களால் வரும் அவ்வப் போது வரும் புகார்களைத் தான் சரி செய்ய முடியும். வேறு வேலைகளை ஒப்பந்தம் மூலமாகத்தான் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் ஏற்படும் காலதாமதத்தை பயன்படுத்தி கையூட்டு பெறுவது இயல்பாக பெருமளவில் நடைபெறு கிறது என்றும் கூறப்படுகிறது. அரசும், நிர்வாகமும் கண்டும் காணாமல் இருப்பது நல்லதல்ல என பொதுமக்கள் ஆதங் கத்துடன் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.