தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு

5 Jun 2026, 10:06 pm
தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு
<p>ஈரோடு, ஜூன் 5- கூரபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் எண் ணெய் நிறுவனத்திற்கு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது. ஈரோடு ஒன்றியம், கூரபாளை யம் கிராமத்தில் சன் ராஜா ஆயில் இன்டஸ்ட்ரீஸ் செயல்பட்டு வரு கிறது. மிஸ்டர் கோல்டு சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட் கள் இங்கு தயாரிக்கப்பட்டு வரு கிறது. 2004 ஆம் ஆண்டு இந்நிறு வனம் செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் கடலைப்பருப்பு கொண்டு சென்றால் எண்ணெய் ஆட்டி தருவார்கள் என்று அப்பகுதி யினர் கருதி வந்தனர். நாளடைவில் குரூட் ஆயில் வாங்கி, அதில் சல்பர் போன்ற வேதிப் பொருட்களை கலந்து அதிலிருந்து கடலை எண் ணெய், ரீபைன்ட் ஆயில் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து வரு கின்றனர். இதன் கழிவுகள் குறிப் பாக காற்றில் வேதிப்பொருட்க ளின் நெடி கலந்து பல்வேறு உபா தைகளை ஏற்படுத்தி வந்தது. இத னால் அப்பகுதி மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிப்படைந்து வருவதாக புகார் எழுந்தது. மேலும், ஆலையிலி ருந்து முறையாக கழிவுகள் அகற் றப்படாததால் விவசாயமும் பாதிக் கப்பட்டது. இதனை உணர்ந்த அப் பகுதி மக்கள் ஆலையின் செயல் பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வெள்ளியன்று நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் மேற்கண்ட ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ஓடையில் இந்நிறு வன திட, திரவு கழிவுகள் வெளி யேற்றப்படுவதால், மனிதர்க ளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற் படுகிறது. குறிப்பாக, பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. இந்த தண் ணீரை குடித்த ஆடு, மாடுகள் மலட் டுத்தன்மை அடைந்துள்ளன. விளைச்சலும் குறைந்து விட்டது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலு வலர்களுக்கு மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லாத நிலையில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட் டோம். பொதுமக்களின் எதிர்ப் பால், 3 மாதங்கள் ஆலை மூடப்பட் டது. பின்னர் ஆலை நிர்வாகம் நீதி மன்றம் சென்று ஆலையை திறந்து நடத்தி வருகின்றனர். அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் முறையிட்ட தற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் நம்புங்கள் என்று கூறிச்சென்றார். அரசும், அரசாங்கமும் மக்கள் நல னில் அக்கறையுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆலை மூடப் படாவிட்டால், விவசாயிகளும், பொதுமக்களும். இரண்டாவதாக இருக்கும் பட்சத்தில் போராட்டங் களை தவிர்க்க முடியாது, என்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.