முந்தய பக்கம்

மதுக்கடையை அகற்றக்கோரி காத்திருப்புப் போராட்டம்

3 Jul 2026, 1:21 am
மதுக்கடையை அகற்றக்கோரி காத்திருப்புப் போராட்டம்
<p><strong>மதுக்கடையை அகற்றக்கோரி காத்திருப்புப் போராட்டம்</strong></p><p>ஈரோடு, ஜூலை 2- கடம்பூரில் செயல்பட்டு வரும் மது பானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று காத்திருப் புப் போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை பேருந்து நிலைய வளாகத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 முதல் செயல்பட்டு வரும் இக் கடையினால் பெண்கள், குழந்தைகள் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆட்சி மாறியதைத் தொடர்ந்து 700க்கும் மேற்பட்ட கடைகள் மூட உத்தரவிடப் பட்டது. ஆயினும் இந்த கடை விடுபட் டுள்ளது. இந்நிலையில், இக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து வியாழனன்று காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தயா ளம்மாள் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜே.உஷா, மாவட்டச் செயலாளர் ஜெ.அருந்ததி, வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் கே.பாலமுரளி, மலை வட்டாரச் செய லாளர் டி.லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அரசு அலுவலர் கள், 10 நாட்களில் கடையை மூடுவதாக வாய்மொழியாக உறுதியளித்தனர். ஆனால் எழுத்துப்பூர்வமாக அளிக்க வில்லை. இதனால் நூற்றுக்கும் மேற் பட்டோர் அங்கே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram