கடனும் பெற முடியவில்லை; காப்பீட்டு திட்டத்திலும் பயனில்லை! வேதனையில் தவிக்கும் மலைப்பகுதி வாழை விவசாயிகள்
27 Sept 2026, 2:29 am

கடனும் பெற முடியவில்லை; காப்பீட்டு திட்டத்திலும் பயனில்லை!

வேதனையில் தவிக்கும் மலைப்பகுதி வாழை விவசாயிகள்

ஈரோடு, செப்.26-கடம்பூர் மலைப்பகுதியில் இலை, மட்டைகள் காய்ந்து வருவதுடன், இயற்கையும் சாதகமாகஇல்லை என்பதால், வங்கிக்கடன் மற்றும் காப்பீட்டு இழப்பீடு கிடைக்கஅரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளி உள்ளிட்ட கிழங்கு வகைகள், மக்காச்சோளம், காய்கறிகள், கரும்பு உள்ளிட்ட பயிர்களுடன், செவ்வாழையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. செவ்வாழை சாகுபடிக்கு ஊட்டச்சத்து நிறைந்த மண், பாசன வசதி உள்ளிட்டவை அவசியமாக உள்ளன. நடவு செய்த 12 மாதங்களில் குலை தள்ளி அறுவடைக்கு தயாராகும். ஒரு ஏக்கருக்கு சுமார்100 கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. நிலத்தை உழுதல், அடி மற்றும் மேல் உரம், பூச்சி மற்றும் வைரஸ் கட்டுப்பாட்டு மருந்துகள் உள்ளிட்டவற்றுக்காக ஒரு கன்றுக்கு சுமார் ரூ.200 வீதம், ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவுஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நடவு செய்தது முதல் அறுவடை வரை முறையான நீர்ப்பாசனம், உரம், மருந்துகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை பாதிப்பு அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டால் மகசூல் குறைந்து நஷ்டம் ஏற்படுவதுடன், பயிர் முற்றிலும்அழியும் நிலையும் ஏற்படலாம். இத்தகைய சூழலில் விவசாயிகளுக்கு அரசு வங்கிகள் மூலம் கடனும், பயிர் பாதிப்புக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் இழப்பீடும் வழங்க ஏற்பாடுnசெய்யப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இரண்டிலும் பலன் கிடைப்பதில்லை என பெரும்பாலான விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சடையப்பன் என்ற விவசாயி கூறுகையில், “எங்கள் அப்பா பெயரில் நிலம் உள்ளது. ஆனால், நான்தான் விவசாயம் செய்து வருகிறேன்.நிலம் என் பெயரில் இல்லாததால் வங்கிக்கடன் பெற முடியவில்லை” என்றார். மேலும், விவசாயம் பாதிக்கப்படும் நிலையில்காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெறுவதும் எளிதாக இல்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காப்பீடு செய்வதே சிரமமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். நீண்ட கோடையால் வளர்ப்புப் பருவத்தில் போதிய நீர் பாய்ச்ச முடியாத நிலையில், தற்போது பெய்யும் மழையால் காய்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

இலை, மட்டைகள் காய்ந்து வருவதுடன், இயற்கையும் சாதகமாகஇல்லை என விவசாயிகள் வேதனைதெரிவிக்கின்றனர். வங்கி கடன் மற்றும் காப்பீட்டு இழப்பீடு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.