முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் கேட்டு மனு

1 Jun 2026, 11:39 pm
அடிப்படை வசதிகள் கேட்டு மனு
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு மனு</strong></p><p>ஈரோடு, ஜுன் 1- சாக்கடை வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, ஜம்பை பேரூராட்சி, வாய்க்கால்பாளையம் பட்டிய லின காலனி பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா கமிட்டி உறுப்பினர் பி.கோபாலகண்ணன் தலைமை யில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், காலனி வீதியின் நடுவில் ஆபத்தான முறை யில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும். ஊர் முழுவதி லிருந்தும் வரும் சாக்கடை நீர் மெயின் ரோட்டில் தேங்கி, புழுக் கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் புகுந்து நோய் பரப்பும் அபாயம் நிலவுகிறது. காங்கிரீட் சாலைப் பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு, ஜல்லிக்கற்களால் போக்குவரத்து இடை யூறு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் அங்குள்ள ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகிறது. இப்பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்ட காத்திருப்புப் போராட்டத்தின் போது தந்த வாய்மொழி உத்தரவாதமும், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி செயல் அலுவலரிடம் அளிக்கப் பட்ட நினைவுப் பூர்வமான மனுவும் மதிக்கப்படவில்லை. தெருவிளக்கு கம்பம் மட்டுமே மாற்றப்பட்டுள்ள நிலையில், வீதி நடுவிலுள்ள மின்கம்பம் அகற்றப்படவில்லை; சாக் கடைப் பணிகளும் நடக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வா கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிகழ்வின் போது மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம் உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram