பட்டாவிற்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி ஜமாபந்தியில் மனு
17 Jun 2026, 10:13 pm
<p><strong>பட்டாவிற்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி ஜமாபந்தியில் மனு</strong></p><p>ஈரோடு, ஜூன் 17- ஈரோடு மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி தொடங் கியுள்ள நிலையில், வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டம், எழுமாத்தூர் அ.கிராமத்தில் பொன்விழா நகர் உள்ளது. இங்குள்ள காலி மனை இடங்களில் 24 பயனாளிகளுக்கு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பல மாதங் கள் கடந்தும், பயனாளிகளுக்கு இதுவரை இடத்தை அளந்து ஒதுக் கப்படவில்லை. எனவே, உடனடி யாக இடத்தை அளந்து, ஒதுக்கீடு செய்து தருமாறு மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஜமாபந்தியில் அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் டி.தங்க வேல் தலைமையில் பயனாளிகள் புதனன்று மனு அளித்தனர். நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தல் இதேபோல், ஈரோடு வட்டம், பிச் சாண்டம்பாளையம் ஊராட்சி, புத் தூர் புதுப்பாளையம் பகுதியில் ரவி என்பவருக்கு கடந்த 2018 இல் அரசு இலவச பட்டா வழங்கியது. அங்கு குடிசை அமைத்து, குடும் பத்துடன் வசித்து வந்த நிலையில், குடிசை பழுதடைந்தது, இதனை புதுப்பிக்க வழியில்லாத நிலை யில், அருகிலுள்ள உறவினர் வீட் டில் தங்கியிருந்தனர். இந்நிலை யில், இவரது இடத்தில் வேறொரு வர் குடிசை போட்டு தங்கியுள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, அவரும் பட்டா வைத்துள் ளார். அத்துடன் காலி செய்ய மாட் டேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, தனக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை மீட்டுத்தரக்கோரி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ரவி மனு அளித்தார். ஜமாபந்தியில் தீர்வு கோபிசெட்டிபாளையம் வட் டாட்சியர் அலுவலகத்தில், ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் மகேஸ் வரி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி 41 மனுக்களை அளித்தனர். மூன்று பட்டா மாறுதல் மனு, இரண்டு சாதி சான்றிதழ் மனுக்க ளுக்கு உடனடியாக தீர்வு காணப் பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப் பட்டது. மீதமுள்ள மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரி வித்தனர்.</p>
