விளை நிலங்களில் தேங்கிய மழைநீர்; வீடுகள் சேதம்
31 May 2026, 11:10 pm
<p><strong>விளை நிலங்களில் தேங்கிய மழைநீர்; வீடுகள் சேதம்</strong></p><p>ஈரோடு, மே 31- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், விளை நிலங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும், பலத்த காற்று காரணமாக வீடுகள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்ததால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந் நிலையில், வெள்ளியன்று இரவு கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று வீசியது. இதில், சாலை யோரக் கடைகள் முன்பாக வைக் கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்து வந்தன. பல்வேறு பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இதையடுத்து, இடி, மின்னலுடன் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, கன மழையாக மாறி கொட்டியது. காற்றுடன் பெய்த மழையால் அந்தி யூர் அருகே உள்ள வெள்ளித்திருப் பூர், குடுமுனி தோட்டத்தை சேர்ந்த விவசாயி வெற்றிவேல் (55) வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. அந்தியூர், மறவன்குட்டை பகுதி யில் விவசாயிகள் சாகுபடி செய்தி ருந்த வாழைகள் முறிந்து விழுந் தன. மேலும், விளை நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பவானி, அம்மாபேட்டை பகுதிக ளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மின்சாரம் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் சிரமத் துக்குள்ளாகினர். காட்டாற்று வெள்ளம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் சனி யன்று மாலை இடியுடன் கனமழை பெய்தது. மலைக்கிராமங்களில் வனஓடைகள், பள்ளங்களில் வெள் ளம் பெருக்கெடுத்தோடி, காட் டாற்று வெள்ளமாக உருவெடுத்து அணைக்கரை, டிபி தொட்டி தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி கரை புரண்டோடியது. இதனால் அப் பகுதியில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழையால் கடம்பூர் மலைக்கிரா மங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச் சியான காலநிலை நிலவியது. மழை காரணமாக குளிரான காலநிலை நிலவுவதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களில் புகு வது வெகுவாக குறைந்துவிடும் என வனத்துறையினர் தெரிவித்த னர்.</p>
