முந்தய பக்கம்

கிராம சபையில் விதொச மனு

2 Nov 2026, 11:50 pm
கிராம சபையில் விதொச மனு
<p><strong>கிராம சபையில் விதொச மனு</strong></p><p>ஈரோடு, நவ.2-மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்தக்கோரி, எழுமாத்தூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை அமலாக்கி, 200 நாள் வேலையும், தினக்கூலியாக ரூ.700-ம் தர வேண்டும். கடந்த ஜூன் மாத சம்பளப்பாக்கியை அனைவருக்கும் தர வேண்டும். ஈரோடு மாவட்டம், முத்தையன் வலசில் விவசாயிகள் பயிர்களை உலர்த்த களம் அமைத்துத்தர வேண்டும். மேலும், அப்பகுதியில் சுடுகாடு ஆக்கிரமிப்பினை அகற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும். எழுமாத்தூர் குப்பைக்கிடங்கை ஒழுங்குப்படுத்தி, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். தூய்மைப் பணியாளர், தூய்மைக் காவலர்களுக்கு குறைந்த பட்ச தினக்கூலி ரூ 700/- வழங்க வேண்டும். எல்லக்கடை பகுதியில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு நீண்ட காலம் நிறைவேறாமல் உள்ளதை, உடனே வேலையை துவக்கி குடிநீர் வழங்க வேண்டும். மண்கரடு -பள்ளியூத்து மெயின்ரோட்டின் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகில் தெருவிளக்கு அமைத்துத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எழுமாத்தூரில் ஞாயிறன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் என விதொச தாலுகா செயலாளர் த.தங்கவேல் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram