தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு மோசம்!

15 Jun 2026, 12:21 am
அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு மோசம்!

அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு மோசம்!

ஆய்வுக்கு சென்ற அமைச்சரிடம் குறைகளை கொட்டிய பெண்

ஈரோடு, ஜூன் 14- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங் கப்படும் உணவு படுமோசமாக உள் ளதாக, ஆய்வுக்கு சென்ற அமைச் சரிடம் பெண் ஒருவர் குற்றஞ்சாட் டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெருந்துறையில் செயல்பட்டு வரும் ஈரோடு அரசு மருத்துவக்கல் லூரி மற்றும் மருத்துவமனையில் ஞாயிறன்று பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சானிட்டோரியத் தில் நடைபெற்ற 29 ஆவது பட்ட மளிப்பு நிகழ்ச்சியில் 100 மாணவர் களுக்கு சுகாதாரத்துறை அமைச் சர் அருண் ராஜ் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டை யன், துணி நூல் கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி ஆகி யோர் பங்கேற்று பட்டங்களை வழங்கினர். இவ்விழாவில் பேசிய அருண்ராஜ், மருத்துவம் ஒரு சேவை. மருத்துவம் சார்ந்த மேற் படிப்புகள் படித்து சேவையாற்ற வேண்டும், என்றார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மையம் அமைக்கப்படும். எம்ஆர்பி யில் எடுக்கப்பட்ட மருத்துவ உதவி யாளர்களின் மாத ஊதியம் குறித்து பரிசீலனை செய்யப்படும். நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரா னது. ஏழை, எளிய மக்களுக்கு எதி ரானது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு கல்வி, மருத்துவம் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் போது தமிழக வெற்றிக் கழகம் குரல் கொடுக்கும், என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப் பினர்கள் பங்கேற்றனர். இதனிடையே, சிகிச்சை அளிக் கப்படும் வார்டுகள் மற்றும் கழி வறைகள் உள்ளிட்டவற்றை அமைச் சர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து உணவு தயாரிக்கும் இடங்களுக்கு சென்று சோதனை செய்தார், அப்போது, இந்த மருத் துவமனையில் உள்நோயாளி பிரி வில் உள்ள கணக்கம்பாளை யத்தை சேர்ந்த சிகிச்சையில் உள்ள ஒருவரின் மனைவி தனலட்சுமி மருத்துவமனை குறித்து அடுக் கடுக்கான குற்றச்சாட்டு அமைச்ச ரிடம் வைத்தார். இங்கு வழங்கப் படும் இட்லி வேகாமல் முற்றிலும், மாவு வடிவில் இருந்ததால், அதனை சாப்பிட முடியாமல் கீழே கொட்டியுள்ளனர். உடல்நிலை சரி யில்லாத நோயாளிகளுக்கு இது போன்ற உணவை வழங்கினால் வயிற்றுப்போக்கு போன்ற கூடுதல் உபாதைகள் ஏற்படும் என தெரி வித்துள்ளார். இதேபோல, சனி யன்று மதியம் வைக்கப்பட்ட ரசம் மற்றும் காய் குழம்பை, இரவு சப் பாத்திக்கும் விநியோகித்துள்ள தாகவும், அதுவும் தரமற்றதாக இருந்தது என நோயாளிகளும் குற் றம் சாட்டினர். மேலும், வேறு ஏதேனும் குறை கள் உள்ளதா? என்ற செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பிய நிலை யில், அந்த பெண் என் கணவரை இங்கிருந்து உயிருடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய எண்ணம். நான் எதையும் சொல்லவில்லை என்று கையெடுத்து கும்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.