முந்தய பக்கம்

வெற்றிப் பயணமா? வேதனைப் பயணமா?

1 hour before
வெற்றிப் பயணமா? வேதனைப் பயணமா?
<p><strong>வெற்றிப் பயணமா? வேதனைப் பயணமா?</strong></p><p>ஈரோடு, நவ.2-ஈரோடு அரசு நகரப் பேருந்துகளில் வெற்றிப் பயணம், வேதனைப் பயணமாகிறது என புகார் எழுந்துள்ளது.</p><p>ஈரோடு மாவட்டம், பெருந்துறை - பவானி இடையே பி12 வழித்தடம் எண் கொண்ட நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை உரிய நேரத்திற்கு வருவதில்லை. வெகுநேரம் கழித்து வரும் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. அவைமுறையாக நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் குறித்த நேரத்திற்கு பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேட்டால், ‘ஓசி பயணம் தானே, சட்டம் பேசுகிறீர்களா’ என இழிவுபடுத்தப்படுகின்றனர். இதுகுறித்து கடந்த அக்.12 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன் பிறகும் நிலைமையில் எந்த மாற்றமுமில்லை. பெண்களை இழிவுபடுத்தப்படுவதும், பேருந்துகள் நிற்காமல் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. மகளிர் வெற்றிப் பயணம் பயன்பெறும் வகையில் உறுதிப்படுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஈரோடு தாலுகா செயலாளர் எஸ்.தனலட்சுமி தலைமையில், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடப்பட்டது. சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் பி.லலிதா மற்றும் சிபிஎம் பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram