அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து
27 Oct 2026, 11:30 pm
<p><strong>அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து</strong></p><p>ஈரோடு, அக்.27-திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசுப்பேருந்து திங்களன்று சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் நீலகண்டன், நடந்துநர் ஜெயசேகா் ஆகியோர் பேருந்தை இயக்கியுள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்தமடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத்தடுப்பில் மோதியது. இதில், ஓட்டுநர் நீலகண்டன், நடத்துநர் ஜெயசேகர்மற்றும் பயணிகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் லாரி ஓட்டுநரான கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த பெருமாள் (40) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p>
