தனியார் எண்ணெய் ஆலையை மூட வலியுறுத்தல்
19 Jun 2026, 10:41 pm

தனியார் எண்ணெய் ஆலையை மூட வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 19- ஈரோடு அருகே செயல்படும் தனியார் எண்ணெய் ஆலையை நிரந்தரமாக மூட நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளி யன்று, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.எம்.முனுசாமி பேசுகையில், மூலக்கரை பகுதியில் சன் ராஜா ஆயில் மில் 2004 இல் தொடங்கப்பட்டது. இதனால் ஏற்படும் மாசு குறித்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ஏதா வது பதில் சொல்லப்படுகிறது. ஆனால், பிரச் சனை தீர்ந்தபாடில்லை. தற்சமயம் கூட 15 நாட்களுக்கு ஆலை மூட சொன்னதாக தெரிய வருகிறது. அப்பகுதியில் உள்ள கிணறுகளி லும், தண்ணீரில் டிடிஎஸ் அளவு 4000 ஆகியுள் ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண் எடுப்பதில் முறைகேடு

பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதியளித்த அரசிற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி. அதேநேரத் தில் மண் எடுக்க காலதாமதாகிறது. மழைப் பொழிவு தொடங்கியுள்ளதால், விண்ணப் பித்த அனைவருக்கும் மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கும் மண் எடுக்க அனுமதி யளிக்க வேண்டும். இதில் நடைபெறும் முறை கேடுகளை தடுக்க 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் முறை கேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், வனத் துறையினர் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.200 வசூலித்து வருகின்றனர். தனி நபர்கள் ஒரு நடைக்கு ரூ.1500 வசூலித்து வருகின்றனர். இதுவும் தடுக்கப்பட வேண் டும்.

பயிர்க்கடன் தள்ளுபடி ஆகுமா?

மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. கடன் தள்ளுபடி ஆகுமா, ஆகாதா? என விவசாயிகளின் மன நிலை குழப்பத்தில் இருக்கிறது. மேலும், குத்தியாலத்தூர் மலை வட்டாரத்தில் மின் வேலி அமைப்பதற்கும், மின் மோட்டார்களை இயக்குவதற்கும் மானி யம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. அதற் காக விண்ணப்பித்து இரண்டு வருடங்களா கியும் பயன்கிடைக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார்.