முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்ட ஊழியர்களுக்கு 3 மாத ஊதியம் நிலுவை

26 Jun 2026, 1:33 am
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்ட ஊழியர்களுக்கு 3 மாத ஊதியம் நிலுவை
<p><strong>மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்ட ஊழியர்களுக்கு 3 மாத ஊதியம் நிலுவை</strong></p><p>ஈரோடு, ஜூன் 25- ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டத் தில் பணியாற்றும் 252 ஊழியர்க ளுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதி யம் வழங்கப்படாததை கண்டித்து, சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் புகார் மனு அளிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மூலம், ‘சீட்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் அவுட்சோர்சிங் முறையில் மறு வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 18 ஒன்றியங்க ளிலும் ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள், சமுதாய வழி நடத்துநர்கள் எனப் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கணிசமா னோர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அர சிடமிருந்து நிதி வரவில்லை எனக் கூறி அந்நிறுவனம் ஊதியத்தை இழுத்தடித்து வருகிறது. வாழ்வா தாரமின்றித் தவிக்கும் இவ்வூழியர்க ளின் நிலையை உணர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நிலுவை ஊதியத்தை பெற்றுத் தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் துணைத் தலைவர் முருகையா தலை மையில் மனு அளிக்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் கே. மாரப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram