முந்தய பக்கம்

குண்டும், குழியுமான சாலையால் அவதி!

2 hours before
குண்டும், குழியுமான சாலையால் அவதி!
<p><strong>குண்டும், குழியுமான சாலையால் அவதி!</strong></p><p>ஈரோடு, நவ.13-ஈரோடு ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.</p><p>ஈரோடு - பெருந்துறை சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிரில்ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. சம்பத்நகர் செல்லும் இச்சாலையின் அருகில் தான் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகமும் அமைந்துள்ளது. நாள்தோறும் இந்த சாலையில் சுமார் 4 முறைகளுக்கு குறைவில்லாமல்மாவட்ட ஆட்சியர் சென்று வருகிறார். நீதிபதிகள் உள்ளிட்டோரும் இந்த சாலையைத்தான்பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த சாலையின் தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. சிக்னலிலிருந்து திரும்பும் இடமே பராமரிப்பின்றி கிடக்கிறது. இருவழி சாலையான இதில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டாயம் குறைக்க வேண்டும். ஆனால், அதன் அருகில் இருக்கும் பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கி ஏறும் போதுவாகன ஓட்டிகளையும், அதில் பயணிப்பவர்களையும் அச்சப்பட வைக்கிறது. இதனால் பல விபத்துகள், பழுதுகள் ஏற்படுகிறது. இந்நிலையை விரைந்து போக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram