100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு
29 May 2026, 11:22 pm
<p><strong>100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு</strong></p><p>ஈரோடு, மே 29- 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர் களுக்கு ஈரோடு ஆட்சியர் பாராட்டு சான் றிதழ்களை வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை ஆட் சியர் ச.கந்தசாமி வழங்கினார். ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளி யன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆட்சியர் பேசுகையில், வரும் 2026-27 புதிய கல்வியாண்டில் அனைத்து பள்ளி களும் சிறப்பான தொடக்கத்துடன் செயல் பட தலைமை ஆசிரியர்கள் மாணவர்க ளுக்கு கல்வியோடு நற்பண்புகளையும் கற்றுத்தர வேண்டும். கடந்த 2025-26 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடமும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 ஆம் இட மும் பிடித்துள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் 178 பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகி தம் தேர்ச்சியை வழங்கியுள்ளன. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 128 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியினை வழங்கி யுள்ளன. 10 மற்றும் 12 ஆகிய இரண்டு வகுப்புகளிலும் 100 சதவிகித தேர்ச் சியை 78 பள்ளிகள் வழங்கியுள்ளன. தொடர்ந்து, மலைப்பகுதியில் பயிற்ற கன்னட வழி மாணவர்களுக்கு தமிழ் கற்றல் திறனை மேம்படுத்தி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற உதவிய 4 ஆசிரியர்களுக்கும் மற்றும் தேர்வுக்கு துணைப்புரிந்த அலு வலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் களை வழங்கி வாழ்த்துக்களை தெரி வித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வரு வாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் இ.மான்விழி, எழுத்தாளர் ஈரோடு கதிர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
