மயான வசதியை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
8 Oct 2026, 3:02 am
<p><strong>மயான வசதியை உறுதிப்படுத்த வலியுறுத்தல்</strong></p><p>ஈரோடு, அக்.7-பூதப்பாடி ஊராட்சியில் மயான வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் முறையிடப்பட்டது.ஈரோடு மாவட்டம், பவானி அருகே பூதப்பாடி ஊராட்சியில் எரிமேடை வசதியுடன் மயானம் உள்ளது. மயானத்தில் அரசு நிழற்கூடையுடன் கூடிய காங்கிரீட் எரிமேடை கட்டிக்கொடுக்கப்பட்ட இடம் வேறொரு தனிநபருக்கு சொந்தம்என்று ஒருவர் தடுத்து வருகிறார். இந்நிலையில், காலம் </p><p>காலமாக பயன்படுத்தி வரும் மயானத்தை அரசு பதிவேட்டில் பதிந்து கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் அந்தியூர் வட்டாட்சியரிடம் செவ்வாயன்று மனு அளித்தனர். அம்மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், பவானி தாலுகா தலைவர் எஸ்.மாணிக்கம், செல்லிகவுண்டனூர் கிளைத் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் கே.செந்தில்குமார், பொருளாளர் எஸ்.கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
