தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரோடு புத்தக திருவிழா - சிந்தனை அரங்கில் மிளிர்ந்த பிரளயனின் ‘மண்ணுயிர்க்கெல்லாம்’ நாடகம்!

2 hours before
ஈரோடு புத்தக திருவிழா - சிந்தனை அரங்கில் மிளிர்ந்த பிரளயனின் ‘மண்ணுயிர்க்கெல்லாம்’ நாடகம்!

ஈரோடு புத்தக திருவிழா - சிந்தனை அரங்கில் மிளிர்ந்த பிரளயனின் ‘மண்ணுயிர்க்கெல்லாம்’ நாடகம்!

ஈரோடு, ஆக. 6-தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும், மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் 20-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் மாலை நேரச் சிந்தனை அரங்கில், புகழ்பெற்ற சென்னை கலைக்குழுவின் ‘மண்ணுயிர்க்கெல்லாம்’ நாடகம் அரங்கேறி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் வாழ்வியலையும் அறத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டஇந்நாடகத்தை நாடகக் கலைஞர் பிரளயன் நெறியாக்கம் செய்திருந்தார்.

நாடகத்தின் கதைக்களம், பசிப்பிணி போக்கும் அமுதசுரபியின் பெருமையையும், பெண்ணின் தன்னாட்சியையும் நயம்பட காட்சிப்படுத்தியது. ஆடல் மகளிர் மரபில் வந்த மணிமேகலையை, அரசனின் அந்தப்புரத்தை அலங்கரிக்க வேண்டும் என அவளது பாட்டி வற்புறுத்துகிறாள். ஆனால், தன் சுயமரியாதையையும் அறவழியையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் மணிமேகலை, பாட்டியின் கட்டாயத்தையும் இளவரசனின் காம விருப்பத்தையும் துறந்து தப்பிக்கிறாள்.

தொடர்ந்து மணிபல்லவத் தீவைச் சென்றடையும் மணிமேகலை, அமுதசுரபியை பெற்று காயசண்டிகை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியைப் போக்கும் பேரறப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறாள். காமக்கிழத்தியாக வாழ்வதைக் காட்டிலும், புத்தர் காட்டிய வழியில் பசி போக்கும் மாண்பே மேலானது என உணர்த்தும் மணிமேகலையின் உறுதியைக் கண்டு, இறுதியாக அவளது பாட்டியும் தன் தவறை உணர்ந்து வாழ்த்துகிறாள். “அறம் எனப்படுவது மண்ணுயிர்க்கெல்லாம் உண்டி, உடை, உறையுள் ஈவதே” என்ற உன்னதக் கருத்தோடு நாடகம் நிறைவுற்றது. மேடையின் ஒளியமைப்பும் கலைக்குழுவின் உயிரோட்டமான நடிப்பும் பார்வையாளர்களை இரவு 10 மணியைக் கடந்தும் அரங்கிலேயே கட்டிப்போட்டன.

முன்னதாக, நிகழ்விற்கு அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.சின்னசாமி தலைமை தாங்கினார். அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.தங்கவேலு மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் க.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உருபாணர் இசைக்குழுவினரின் யாழ் இசை நிகழ்வு, அரங்கிற்கு மேலும் ஒரு சங்ககால கலை மிடுக்கை சேர்த்தது. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றி, முடிவில் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.