உத்தரவிட்டு ஓராண்டாகியும் பட்டா வழங்காத அவலம்
19 Jun 2026, 10:44 pm

உத்தரவிட்டு ஓராண்டாகியும் பட்டா வழங்காத அவலம்

ஈரோடு, ஜூன் 19- வீட்டுமனை பட்டா கேட்ட மனு மீது உத்தரவிட்டு ஓராண்டாகியும், பட்டா வழங்கப்படாமல் அலைக்கழிக்கப் பட்டு வருவதாக புகாரளிக்கப்பட்டுள் ளது.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகி றது. பவானி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், ஆப்பக்கூடல் பேரூ ராட்சி, காமராஜர் வீதியில் வசிக்கும் மக்கள் மனு அளித்தனர். அதில், கடந்த 50 ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழை விவசாயி கூலி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து கடந் தாண்டு வருவாய் வட்டாட்சியர் அளவீடு செய்து பட்டா வழங்க உத்தரவிட்டார். ஆனால், தற்போது வரை பட்டா வழங் கப்படவில்லை. எனவே, உரிய நடவ டிக்கை எடுத்து பட்டா கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், விவ சாயத் தொழிலார் சங்க பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தாலுகா செய லாளர் ஏ.ஜெகநாதன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.