மதுக்கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆட்சியரின் அலட்சியப்பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சி
5 Jun 2026, 10:20 pm

ஈரோடு, ஜூன் 5-

அம்மாபேட்டை அருகே 20 நாட்க ளில் மூடப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்த மதுக்கடை தொடர்ந்து செயல் பட்டு வந்ததால், அந்த மதுக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்களை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள முளியனூரில் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மது பானக் கடையை மூடக்கோரி அம்மா பேட்டை - அந்தியூர் சாலையில் முளிய னூர் பிரிவில், கடந்த மாதம் பொதுமக் கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அடுத்த 20 நாட்களில் மதுக்கடை மூடப் படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. ஆனால், மதுக்கடை மூடப் படாமல் தொடர்ந்து மது விற்பனை நடை பெற்று வந்தது. இதனால், ஆவேசம டைந்த முளியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழனன்று மதுக் கடையைத் திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகு றித்த தகவலின் பேரில் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தின குமார், அந்தியூர் வட்டாட்சியர் இளஞ் செழியன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எவ்வித முடிவும் ஏற்படாத தால் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர். இதையடுத்து, மதுக்கடை மூடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தீர்வு காணலாம் என தெரிவித்த போலீ சார், அனைவரையும் விடுவித்தனர்.

ஆட்சியரின் அலட்சியப்பேச்சு

இதைத்தொடர்ந்து, தொடர் போராட் டம் நடத்தி வரக்கூடிய பொதுமக்களை அழைத்து, மாவட்ட ஆட்சியர் கந்த சாமி, ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வெள்ளியன்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, மது பானக் கடையால் ஏற்படக்கூடிய பிரச் சனைகளை பொதுமக்கள் எடுத்துக் கூறி, கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், உடனடியாக கடையை மூட முடியாது. வேறு இடத்தில் மாற்றுவ தற்கு அவகாசம் வேண்டும். கடையை மாற்ற வேண்டும் என்றால், வேறு மாற்று இடத்தை கிராம மக்களே பார்த்து தர வேண்டும் என பேசியதால் பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பேசிய பெண்கள், ஒரு வாரத்திற்குள் கடையை மூடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், என எச்சரிக்கை விடுத் துள்ளனர்.