குடிநீர் வழங்கக்கோரி முறையீடு
1 hour before
<p><strong>குடிநீர் வழங்கக்கோரி முறையீடு</strong></p><p>ஈரோடு, அக்.7-அம்மாபேட்டை அருகே குறிச்சி ஊராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிடப்பட்டது.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட செல்லிகவுண்டனூர் பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி, கடந்த 18.8.26 காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன் பயனாக அன்றே 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி வைத்து பாதுகாக்கப்பட்டகுடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், பத்து நாட்கள் மட்டும் வந்த குடிநீர் நின்று போனது. கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் வரத்து என்பது வாரத்துக்கு ஒரு முறை என்றானது. இறுதியில், 15 நாட்களாக குடிக்க முடியாத தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கோரி செவ்வாயன்று அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து அகிலஇந்தியவிவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று மாலையே 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, விநியோகிக்கப்பட்டது.</p>
