தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் தவிச எதிர்ப்பு - வட்டாட்சியர் சமரசம்

30 Jun 2026, 12:55 am
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் தவிச எதிர்ப்பு - வட்டாட்சியர் சமரசம்
<p><strong>மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் தவிச எதிர்ப்பு - வட்டாட்சியர் சமரசம்</strong></p><p>ஈரோடு, ஜுன் 29- அம்மாபேட்டை பேரூராட்சியில் பாலமலை அடி வாரத்தில் பேரூராட்சியின் அனுமதியின்றி அமைக்கப் படும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அந்தியூர் வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பேரூராட்சி காவி ரிக்கரையில் அமைந்துள்ளது. மற்றொரு எல்லையில் பாலமலை உள்ளது. இந்த ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் அனுமதியின்றி திட, திரவ மற்றும் மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமை யக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடை முறைக்கு சாத்தியமில்லாத இத்திட்டத்தின் கட்டுமானத் திற்கு பேரூராட்சி ரூ.1.04 கோடி வழங்க வேண்டும். இத்திட்டம் கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், செயல்பாட்டிற்கு வரும்போது, நடைமுறை செலவுக ளோடு பராமரிப்பு பணிகளையும், செயல்பாட்டிற்கான பொறுப்பையும் பேரூராட்சி நிர்வாகம் ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலமலை அடிவாரத்தில் பெரிய தொட்டிகள் கட்டி, கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிப்பு நடைபெறும் போது நீர்நிலைகள் பாதிக்கப்படு். விவசாயம் பாதிக்கப் படும். காற்று மாசுபட்டு ஆஸ்துமா, புற்றுநோய், தோல் வியாதிகள் ஏற்படும். அந்தோணிபுரம், ஏரி தோட்டம், அண்ணாசாலை, இந்திரா நகர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்ப டும் ஆபத்து உள்ளது. எனவே, இத்திட்டத்தை உடடினயாக கைவிட வேண் டும் என வலியுறுத்தி வரும் 1ஆம் தேதி தொடர் காத் திருப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்தியூர் வட்டாட்சியர் போராட்டக் குழுவினருடன் திங்களன்று சமரச பேச்சுவார்த்தை நடத் தினார். அதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து, செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தாலுகா செய லாளர் பி.ஆனந்தராசு மற்றும் கவுன்சிலர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்டத்தை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்பதில் உறுதி யாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.