வேலை உறுதி திட்டத்தில் 200 நாள் வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்
6 Oct 2026, 2:05 am

வேலை உறுதி திட்டத்தில் 200 நாள் வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு, அக். 5– கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.700-ம் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 8 ஆவது மாநாடு கோபி, கன்னிமார் திருமண மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன்தலைமை வகித்தார்.துணைச் செயலாளர் என்.நாகராஜன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.வரவேற்புக் குழு தலைவர் பி.வெங்கிடுசாமி வரவேற்றார். மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் தொடக்க உரையாற்றினார். வேலையறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மாநாட்டை வாழ்த்தி ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இம்மாநாட்டில், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 200 நாள் வேலை மற்றும் ரூ.700 தினக்கூலி வழங்குவதோடு, சொந்த இடமில்லாத விவசாயத்தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக, மாவட்டத் தலைவராக ஆர்.விஜயராகவன், செயலாளராக சி.முருகேசன், பொருளாளராக எஸ்.மாணிக்கம் மற்றும் துணை தலைவர்களாக கே.நர்மதா, ஏ.சகாதேவன், துணை செயலாளர்களாக என்.நாகராஜ் மற்றும் கே.சி.ரங்கசாமி உள்ளிட்ட 21 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், பொருளாளர் ஏ.பழனிசாமி ஆகியோர் நிறைவுரையாற்றினர்.கே.சி.ரங்கசாமி நன்றி கூறினார்.