கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
3 Dec 2025, 2:59 pm

ஈரோடு: உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக 47 மாற்றுத்திறனாளிகள் நியமனம்

ஈரோடு, டிச.3- ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக 47 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய் யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித் துள்ளார். ஈரோடு மாவட்டம், கூரபாளையம், நந்தா இயன்முறை கல்லூரியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடை பெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களை வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 24 ஆயிரத்து 898 நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது. பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000- வழங்கும் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் நிதியாண்டில் 288 பயனாளி கள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 7623 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான பரா மரிப்பு உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 134 நபர்களுக்கு ரூ.10.98 லட்சம் மதிப்பில் வழங்கப் பட்டுள்ளது. திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத் தின் கீழ் 9 நபர்களுக்கு ரூ.4.25 லட்சம் அதனுடன் சேர்த்து 9 நபர்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள் ளது. மேலும், முதலமைச்சர் உத்தரவின்படி நடப்பாண்டில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்து வம் அளிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் 47 மாற்றுத்திறனா ளிகள் நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள் ளனர், என்றார். இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) காஞ்சன் சௌதரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விதிமீறல் குற்றச்சாட்டு: பாரதியார் பல்கலை பதிவாளர் பணியிடை நீக்கம்

கோவை, டிச.3- கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பொறுப்பு பதி வாளரும் பேராசிரியருமான ரூபா குணசீலன் பல்கலை விதிமுறை களை மீறியதாக எழுந்த குற்றச் சாட்டுகள் உறுதியானதைத் தொடர்ந்து, அவர் மீது பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. கோவை மருதமலை அடிவாரத் தில் செயல்படும் பாரதியார் பல் கலைக்கழக நிதிக் குழு மற்றும் சிண்டி கேட் ஒப்புதல் பெறாமல் பல்வேறு நிர்வாக முடிவுகளை எடுத்தது, நிதி ஒழுங்கு மீறல்கள் உள்ளிட்ட பலத்த குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகத் தின் முன்னாள் பொறுப்பு பதிவாள ரும் பேராசிரியருமான ரூபா குணசீ லன் மீது எழுந்தன. இது தொடர் பாக விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல் கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பார்த்தசாரதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விரி வான விசாரணைக்குப் பிறகு அறிக் கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கை யை ஏற்று, பாரதியார் பல்கலைக்கழ கத்தின் தற்போதைய பதிவாளரும் தேர்தல் குழு உறுப்பினருமான ராஜ வேல் உத்தரவின் பேரில் ரூபா குண சீலன் உடனடியாக பணியிடை நீக் கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மதிப்பீட்டில் A++ தரம் பெற்று, 143 உறுப்புக் கல்லூரிகளை யும், 39 துறைகளில் முனைவர் பட்டம் உட்பட 54 முதுகலைப் படிப்புகளை யும் கொண்டு இயங்கும் பாரதி யார் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ள இந்த நிர்வாக ஊழல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பல்கலை ஊழியர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் இந்நடவடிக் கையை வரவேற்றாலும், “நிதி முறை கேடு, ஆட்சிமன்ற ஒப்புதல் மீறல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நடப்பதை முழுமையாக ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வரு கின்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரூபா குணசீலன் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் வெளியிடப்பட வில்லை. மேலும் விசாரணை தொடர் வதாக பல்கலை நிர்வாக வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

அணைகள் நிலவரம்

சோலையார் அணை நீர்மட்டம்:133/160 அடி நீர்வரத்து:179கனஅடி நீர்திறப்பு:626.48கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:70.80/72அடி நீர்வரத்து:1121கனஅடி நீர்திறப்பு:990கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:116/120அடி நீர்வரத்து:305கனஅடி நீர்திறப்பு:305கனஅடி

3 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் தாமதம் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்

கோவை, டிச.3- கோவை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லக் கூடிய விமானம் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் இண்டிகோ நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மும்பை விமான நிலையத்திலிருந்து கோவை விமான நிலையத்துக்கு இரவு 7.45 மணி அளவில் வந்து பின்னர் கோவையிலிருந்து மும்பைக்கு இரவு 8.40 மணிக்கு இன்டிகோ விமானம் புறப்பட்டு செல்லும். இந்நிலையில் செவ்வா யன்று இரவு மும்மையிலிருந்து கோவை கிளம்ப வேண்டிய இண்டிகோ விமானம், மும்பையில் பெய்த கனமழையின் கார ணமாக சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த விமானத்தில் கோவையிலி ருந்து மும்பை பயணிக்க வேண்டிய விமானிகள் 3 மணி நேரத் திற்கும் மேலாக கோவை விமான நிலையத்துக்குள் காத்திருக் கின்றனர். இதனையடுத்து தங்களுக்கு போதுமான இடவசதி இல்லை எனக்கூறி விமான நிலைய ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பயணிகளுக்கு விமான நிறுவனம் சார்பில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதி களும் செய்யப்பட்டன. எனினும் விமானம் எத்தனை மணிக்கு வரும், என்பது உள்ளிட்ட முறையாக எந்த தகவல்களை யும் இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வழங்காததால் அவர்க ளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே போல கோவையில் இருந்து ஹைதராபாத் செல்லக்கூடிய இன்டிகோ விமானமும் இயக்கப்படவில்லை என பயணி கள் தெரிவித்தனர்.