எர்ணாவூர் ஐடிசி பகுதியை விற்பனை மண்டலமாக அறிவிக்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
2 hours before

எர்ணாவூர் ஐடிசி பகுதியை விற்பனை மண்டலமாக அறிவிக்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, செப். 21-எர்ணாவூர் ஐடிசி கிளை சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் 25ஆம் ஆண்டு பேரவை ருசி சுப்பிரமணி தலைமையில் ஞாயிறன்று (செப். 20) நடைபெற்றது.

சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.வெங்கட் பேரவையை துவக்கி வைத்து பேசினார். நகர விற்பனை குழு உறுப்பினர் ஆர்.பாளையம் வாழ்த்திப் பேசினார். மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக பெ.சங்கர் வரவேற்றார். பி.சுமதி நன்றி கூறினார்.

எர்ணாவூர் ஐடிசி பகுதியை விற்பனை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.மாநகராட்சி அடையாள அட்டை வழங்காதவர்க ளுக்கு உடனே வழங்க வேண்டும். வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளின் 2014 சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

கவுரவத் தலைவராக ஜெ.அன்பு, தலைவராக ருசி சுப்பிரமணி, செயலாளராக பெ.சங்கர், பொருளாளராக சங்கீதா உட்பட 7 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.