தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

10 Jan 2026, 2:48 pm
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
<p><strong>சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்</strong></p> <p>கோவை, ஜன.10- பொங்கல் பண்டிகையை முன் னிட்டு பல்வேறு பகுதிகளில் சமத் துவ பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. தைப்பொங்கல் பண்டிகை வர வுள்ள நிலையில், தமிழகத்தி லுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி களில் வெகு விமர்சையாக சமத் துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சனியன்று கோவை அன்னூர் பகுதி யில் உள்ள சசூரி கல்வி நிறுவனங்க ளில் நடைபெற்ற சமத்துவ பொங் கல் விழாவில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் வேட்டி - சட்டை என பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்து கொண்டனர். புடவை அணிந்து வந்த மாணவியர் நடன மாடி, மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர். மாணவிகள் வண்ண கோலமிட்டு, கும்மியாட் டம், கோலாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர். சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து சேலம் தாலுகா கமிட்டி சித்தனூர் கிளை யின் சார்பாக சாதி, மதம், மொழி, இனம் கடந்து மக்கள் ஒற்றுமையை &nbsp;வலியுறுத்தி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாதர் சங்க தாலுகா பொருளாளர் எஸ். கஸ்தூரி தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.சுந்தரம், சிபிஎம் தாலு காக்குழு உறுப்பினர்கள் டி.பரமேஸ் வரி, எம்.சீனிவாசன், கிளைச் செய லாளர் ஏ.அண்ணாமலை, மாதர் சங்க தாலுகா செயலாளர் எஸ். பூங்கோதை, மாவட்ட உதவி தலை வர் எம்.செல்வி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நிறை வாக கே.சாரதா நன்றி கூறினார். சேலம் அரசு பொறியியல் கல் லூரியில் வெள்ளியன்று தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பொறுப்பாசிரியர் ப.சக்திவேல் விழா தலைமை ஏற்றார். மன்றத்தின் புரவலரும், கல்லூரியின் முதல்வ ருமான முனைவர் வி.கீதா பொங் கல் வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்க மாவட்டத் தலைவர் சேக் அப்துல்லா தமிழ் பண்பாடு, சமத் துவ பொங்கலின் தேவை குறித்து பேசினார். தொடர்ந்து இன்றைய &nbsp;தலைமுறையால் பொங்கல் பண் டிகை கொண்டாடப்படுகிறதா? திண்டாடப்படுகிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற் றது. அதற்கு பி.தங்கவேலு நடுவ ராக கலந்து கொண்டார். இதில், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர் கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சேலம் தேக்கம்பட்டி பகுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கான கபடிப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியை தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் மற் றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் அணி அணியாக பங்கேற்று தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி விளையாடினர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. நீலகிரி உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வெள்ளியன்று சமத் துவ பொங்கல் கொண்டாடப்பட் டது. கல்லூரி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமி ழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி &ndash; சட்டை, சேலை உடுத்தி பொங்கல் வைத்து கொண்டாடினர். &nbsp;மேலும், பளு தூக்குதல், உறி &nbsp;அடித்தல், கோலப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஆடல் பாடலுடன் விழா களைகட்டியது. முடிவில், பல் வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.