சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
16 Jan 2026, 3:00 pm
<p><strong> சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்</strong></p>
<p>கோவை, ஜன.16- தமிழர் திருநாளாம் பொங்கல் திரு நாள் கோவை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா வாக நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழனன்று, மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே. எஸ்.கனக ராஜ், என்ஆர்.முருகேசன், வி.ராம மூர்த்தி, கிழக்கு நகரக்குழு செயலாளர் கே.சுபாஷ், வடக்கு நகர குழு செயலா ளர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், கோல போட்டி, கயிறு இழுத்தல், நடன போட்டி, உரியடித்தல், லெமன் ஸ்பூன், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்படி பீள மேடு பகுதியில் தண்ணீர் பந்தல், நேரு நகர், ஆவாரம்பாளையம், நேதாஜி நகர், இளங்கோ நகர் ஆகிய இடங்க ளிலும், சூலூர் பகுதியில் நடுப்பாளை யம், இருகூர் மற்றும் வஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் போட்டிகள் நடத்தப்பட் டன. இதேபோல் பெரியநாயன்பாளை யம் பகுதியில் துடியலூர், ஜனநாயுடு வீதி, அப்பநாயக்கன்பாளையம், இடை யார்பாளையம் பகுதிகளிலும், கோவை வடக்கில் ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், கணபதிபுதூர், அப்பாயி மன்றம் உள் ளிட்ட இடங்களிலும், கோவை மேற் கில் 81 ஆவது வார்டு, கெம்பட்டி காலனி ஆகிய இடங்களிலும் விழாக்கள் நடை பெற்றன. எஸ்.எஸ். குளம் பகுதியில், விளாங்குறிச்சி, நா.க.புதூர், கீரநத்தம், இடிகரை, சிவானந்தபுரம், சிவானந்த புரம் (1), உள்ளிட்ட இடங்களிலும், சிங்கை பகுதியில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, சௌரிபாளையம் ஆகிய இடங் களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்னூர் பகுதி யில், பட்டறை, ஏ.எம்.காலனி, ஆனந்தா தியேட்டர், அல்லிக்காரம் பாளையம் உள்ளிட்ட இடங்களிலும், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற் றன. இந்நிகழ்ச்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாவட் டத் தலைவர் ராஜா, மாவட்டச் செயலா ளர் தினேஷ் ராஜா, பொருளாளர் அர் ஜுன், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.அகமது ஜூல்பிகர் மற்றும் வாலி பர் சங்க இடைக்குழு நிர்வாகிகள் சக்தி வேல், ஸ்ரீதர், சந்துரு, தண்டபாணி, பிர கதீஷ், அனுஸ்ரீ, முத்து முருகன், மனோஜ், ராஜேஷ், ரத்தீஷ், சூர்யா, இளங்கோ, சௌபர்ணிகா, பிரவீன், குரு சாரதி, லோகு, ரமேஷ், தீபிகா, தியாகு, ரெனித், மேரி, நிசார் அஹமது, விக்னேஷ், விபின் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இதேபோல பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு உள்ளிட்ட வர்க்க வெகு ஜன சங்கங்களின் தலைவர்கள் பங் கேற்று சிறப்பித்தனர். தருமபுரி தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. பாரதிதாசன் தெரு கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றுமைச் சங்க திடலில் புதுப் பானை வைத்து பொங்கலிட்டு அனை வருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப் பட்டது. பின்னர் மாலையில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றன. சிறு வர் சிறுமியர் பங்கேற்ற திருக்குறள் ஒப்பு விக்கும் போட்டி, பேச்சு, பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற் றன. இதில் சிறப்பிடம் பெற்ற 133 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழாவை மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ராஜாமணி துவக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளை வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலா ளர் சிலம்பரசன் துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி கவுன்சிலர் விசுவநாதன், வைஸ் ஆறுமுகம் நினைவு கல்வி அறக்கட்டளை இயக்குனர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கௌரவித்த னர். இந்நிகழ்வில், ஏராளமான பொது மக்கள் பெண்கள் மற்றும் குழந்தை கள் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் வசந்த் நகர் கிளை நடத்தும் 16ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை தைப் பொங்கல் விழா வியாழனன்று நடை பெற்றது. இதில், வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. அரவிந்த்சாமி, மாவட்டத் தலைவர் எம். நவீன், மாவட்டச் செயலாளர் டி.சர வணன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப் பித்தனர். இந்நிகழ்வில், சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்துப்பிரிவினருக்குமான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சேலம் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐ டியு) மேட்டூர் ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் மத நல்லிணக்க சமத்துவ பொங் கல் விழா மேட்டூர் அணை சின்ன பார்க் அருகில் கொண்டாடப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ தலைமை தாங்கினார். கட் டிட தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் சி.கருப்பண்ணன் துவக்கிவைத் தார். இதில், மேட்டூர் பள்ளிவாசல் இமாம் பர்கத் அலி ரஹீம், மேட்டூர் புனித மரியன்னை ஆலய அருட் தந்தை இருதய செல்வம், மேட்டூர் ஸ்ரீ காளியம்மன் மாரியம்மன் ஆலய அர்ச்ச கர் பாலாஜி, சி.எஸ்.ஐ ஆலய போதகர் ஜெயராம் ஜெப வீரன் ஆகியோர் பங் கேற்று சிறப்பித்தனர். இதில் திரளா னோர் பங்கேற்றனர். வேளாண்மை பல்கலை., பொங்கல் விழா கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மத்திய பண்ணை வளாகத்தில் பட்டி பொங்கல் திருவிழா வியாழனன்று கோலங்கலமாக கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த பொங் கல் நிகழ்ச்சியில் வள்ளி கும்மி ஆட்டம், கும்மி ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சி கள் இடம் பெற்றன. இதில் வள்ளி கும்மி கலைஞர்களுடன் பல்கலைக் கழக பணியாளர்களும் சேர்ந்து நடன மாடினர். விழாவின் முக்கிய நிகழ்வான பட்டி மிதிக்கும் நிகழ்வில் பால், தயிர், நவ தானியம், மஞ்சள், பன்னீர், சந்தனம், குங்குமம், கோமியம் ஆகிய 9 பட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டு பசு மாடு அழைத்து வரப்பட்டது. அதில் பசுமாடு நவதானிய பட்டி தொட்டியில் முதலில் கால் வைத்தது. நவதானியத்தில் முதலில் கால் வைத்ததால் இந்த ஆண்டு விவசாயம் உணவு உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைப் பொங்கல் விழா பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உலாந்தி வன சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானை கள் முகாமில் வனத்திற்கும், வனத் துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக யானை பொங்கல் விழா நடைபெற்றது. யானை களை குழிப்பாட்டி, பொட்டு வைத்தும் மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு பழங்குடியின மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப் பட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப் பட்டனர். பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவுகளை வழங்கினர்.</p>
<p> </p>
