சமத்துவ பொங்கல் விழா
13 Jan 2026, 3:17 pm
<p><strong>சமத்துவ பொங்கல் விழா</strong></p>
<p>கோவை, ஜன.13- கோவை மாநகராட்சி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சமத் துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வியாழனன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி அலுவலகத் தில் செவ்வாயன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் வெற்றி செல்வன், மாநக ராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்களின் கரகாட்டம், சிலம்பம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், பறையிசை, ஜமாப், ஜிக்காட்டம் ஆகியவை இடம்பெற்றன. இதேபோன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ப.நாராயணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிறைமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலைமை வகித்து வைத்தார். அரசு அலுவலர்களிடையே நடைபெற்ற பாராம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உரி அடித்தல், லக்கி கார்னர் போன்ற விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம்) மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) (பொ) ராம்குமார், லோகநாதன் (வேளாண்மை), உதவி சுற்றுலா அலுவலர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
